Tuesday, August 18, 2009

அம்மா - திட்டல்

மழையில் நனைந்துகொண்டே விட்டுக்கு வந்தேன்

'குடை எடுத்துட்டுபோக வேண்டியது தானே' - அண்ணன் திட்ட

'எங்கயாவது ஒதுங்கி நிக்க வேண்டியது தானே' - அக்கா திட்ட

'சளி பிடித்து செலவு வைக்க போறான்' - அப்பா திட்ட

தன் முந்தானையில் என் தலையை துவட்டிக்கொண்டே திட்டினால் அம்மா - 'மழையை'

Time Machine